கருங்குளம் யூனியன் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம்
கருங்குளம் யூனியன் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம்
ஸ்ரீவைகுண்டம்:
தெலுங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரம் வழங்கப்படுகிறது. அதிகமாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதேபோல தமிழகத்திலும் வழங்க வேண்டும், தனியார் துறைகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு உத்தரவாதப்படுத்தி சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும், உச்சநீதிமன்ற முதன்மை அமர்வு தீர்ப்பின்படி தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் பின்னடைவு காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் குடியேறும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்க கருங்குளம் ஒன்றியம் சார்பாக குடியேறும் போராட்டம் நடந்தது. கருங்குளம் யூனியன் வளாகத்தில் நடந்த 2-ம் கட்ட மாற்றுத்திறனாளிகள் நடத்திய போராட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர்கள் மாடசாமி முன்னிலை வகித்தார். குடியேறும் போராட்டத்தில் 85 மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.. இதில் கிளைத்தலைவர் பொன்னுத்தாய், ஞானப்பிரகாசம், கந்தசாமி, அய்யப்பன், பொறுப்பாளர்கள் சங்கரசுப்பு, நம்பி, மாரிமுத்து மற்றும் கிளை செயலாளர் கனகா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story