திருக்கோளூர் வைத்தமாநதி பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு


திருக்கோளூர் வைத்தமாநதி பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 24 Feb 2021 5:14 PM IST (Updated: 24 Feb 2021 5:14 PM IST)
t-max-icont-min-icon

திருக்கோளூர் வைத்தமாநதி பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு

தென்திருப்பேரை:
குபேரன், பார்வதியை நோக்கி கடைக்கண்ணால் பார்த்ததின் விளைவாக பார்வதி இட்ட சாபத்தால், குபேரன் தன் நிதியினை இழந்தார். இதனால் உனக்கு ஒரு கண் தெரியாது. மேனியும் விகார தோற்றத்தில் இருப்பாய். உன் நிதி கிடைக்க வேண்டுமென்றால் நதியின் தென்கரையில் உள்ள வைத்தமாநிதி பெருமாள் கோவில் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டால் உன் நிதி கிடைக்கும் என்று கூறினார். அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம் நவதிருப்பதி தலங்களில் எட்டாவது ஸ்தலமான திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவிலில் நேற்று குபேரன் இழந்த செல்வத்தை திரும்ப பெற்ற நாள கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள்  தங்களிடமுள்ள பணத்தை பெருமாளின் காலடியில் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தி எடுத்து சென்றனர். இந்த வழிபாடு காலை 8 மணி முதல் இரவு வரை நடைபெற்றது.

Next Story