கோவில்பட்டி புற்றுக்கோவிலில் பிரதோஷவிழா
கோவில்பட்டி புற்றுக்கோவிலில் நேற்று பிரதோஷவிழாவை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சமேத ஸ்ரீ சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் பிரதோஷ விழா சிறப்பு பூஜை நடைப்பெற்றது. மாதந்தோறும் இருமுறை வளர்பிறை, தேய்பிறை திரயோதசி தினமே பிரதோஷம் என்ற பெயரில் சிவ ஆலயங்களில் சிறப்பு பூஜை வழிபாடுகளுடன் கொண்டாடப்படுகிறது. பிரதோஷ வழிபாடு சுபமங்களம் தரும். இதனையொட்டி மாலை 4மணிக்கு கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபன கும்ப கலச பூஜை ருத்ர ஜெபம், மழை வேண்டி வருண ஜெபம், தீபாரதணை நடைப்பெற்றது. தொடர்ந்து சங்கரலிங்க சுவாமி நந்தியம் பெருமானுக்கு மஞ்சள் பால் தேன் வீபூதி பன்னீர் சந்தனம் போன்ற 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாரதணை நடைப்பெற்றது. விழாவில் கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்றுவட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சமூக இடைவெளி விட்டு, முககவசம் அணிந்து நெய் தீபம் ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story