கணவருடன் ஏற்பட்ட தகராறில் விபரீத முடிவு இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


கணவருடன் ஏற்பட்ட தகராறில் விபரீத முடிவு இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 24 Feb 2021 6:07 PM IST (Updated: 24 Feb 2021 6:07 PM IST)
t-max-icont-min-icon

கணவருடன் ஏற்பட்ட தகராறில் விபரீத முடிவு இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை ஆர்.டி.ஓ. விசாரணை.

பூந்தமல்லி, 

அரும்பாக்கம், ஜெகநாதன் நகர், 1-வது தெருவை சேர்ந்தவர் கிஷோர் (வயது 24). காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மீனாட்சி (வயது 21), இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், கடந்த வாரம் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மீனாட்சி வீட்டிற்குள் உள்ள உள்அறைக்கு சென்று திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்ததாகவும் தெரிகிறது. இதனை கண்டதும் அதிர்ச்சியடைந்த கிஷோர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று தூக்கில் தொங்கி கொண்டிருந்த மீனாட்சியை மீட்டார். பின்னர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தார்.

அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த மீனாட்சி நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது பற்றி தகவல் அறிந்த அரும்பாக்கம் போலீசார் அங்கு வந்து, மீனாட்சி உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆவதால் ஆர்.டி.ஒ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Next Story