ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் நவீன மோட்டார் எந்திரத்துடன் கூடிய ரப்பர் படகில் சோதனை ஓட்டம் தீயணைப்புத்துறையினர் நடத்தினர்

ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் நவீன மோட்டார் எந்திரத்துடன் கூடிய ரப்பர் படகில்  சோதனை ஓட்டம் தீயணைப்புத்துறையினர் நடத்தினர்
x
தினத்தந்தி 24 Feb 2021 6:47 PM IST (Updated: 24 Feb 2021 6:47 PM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் நவீன மோட்டார் எந்திரத்துடன் கூடிய ரப்பர் படகில் தீயணைப்புத்துறையினர் சோதனை ஓட்டம் நடத்தினர்.

ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் நவீன மோட்டார் எந்திரத்துடன் கூடிய ரப்பர் படகில் தீயணைப்புத்துறையினர் சோதனை ஓட்டம் நடத்தினர்.
ரப்பர் படகு
 தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புபணித்துறை சார்பில் பேரிடர் கால மீட்புபணிகளுக்காக ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு நிலையத்திற்கு நவீன எந்திரத்துடன் கூடிய ரப்பர் படகு வழங்கப்பட்டுள்ளது. 
மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் உத்தரவின்பேரில் ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு நிலைய பணியாளர்கள் தாமிரபரணி ஆற்றில் நவீன மோட்டார் எந்திரத்துடன் கூடிய ரப்பர் படகில் சோதனை ஓட்டம் மேற்கொண்டனர்.
மீட்பு பணி குறித்து பயிற்சி
நிலைய அலுவலர் இசக்கி, போக்குவரத்து பிரிவு முத்துக்குமார், தலைமையிலான தீயணைப்புபடை வீரர்கள் மழைவெள்ள காலங்களில் ஆற்றில் சிக்கியவர்களை மீட்பது எப்படி? என்பது உள்ளிட்ட மீட்புபணிகளை மேற்கொள்வது எப்படி? என்பது குறித்த பயிற்சி பெற்றனர். 
இதேபோல நீண்டநாள் கோரிக்கையான தாமிரபரணி ஆற்றின் கடைசி அணைக்கடான ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் படகு குழாம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story