திருவண்ணாமலையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கைது.


திருவண்ணாமலையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கைது.
x
தினத்தந்தி 24 Feb 2021 6:49 PM IST (Updated: 24 Feb 2021 6:49 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது. போராட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் என சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

 முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் 110 விதியின் கீழ் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்குவேன் என்று அறிவித்ததை அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

 அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் மற்றும் முறையான குடும்ப ஓய்வூதியம் அறிவித்திட வேண்டும். பணி ஓய்வு பெறுகின்ற போது பணிக் கொடையாக ஊழியர்களுக்கு ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் வலியுறுத்தினர்.

 அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களை போலீசார் கைது செய்தனர். மொத்தம் 104 பேர் கைது செய்யப்பட்டனர்.

Next Story