தூத்துக்குடியில் ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடியில் ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 Feb 2021 8:13 PM IST (Updated: 24 Feb 2021 8:13 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் தூத்துக்குடி மேட்டுப்பட்டி பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் தூத்துக்குடி மேட்டுப்பட்டி பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கிளைத்தலைவர் ஆனந்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பூமயில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து கோஷம் எழுப்பினர். அப்போது கியாஸ் சிலிண்டரை பாடைகட்டி தூக்கி வந்து நூதனமாக போராட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர் மாரியம்மாள், செல்வி, சி.ஐ.டி.யூ. பரமசிவன், பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story