பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினவிழா


பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினவிழா
x
தினத்தந்தி 24 Feb 2021 8:39 PM IST (Updated: 24 Feb 2021 8:39 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினவிழா கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது.

ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினவிழா கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு திட்டங்கள்

 முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெண் குழந்தைகள் மற்றும் மகளிர் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு தொட்டில் குழந்தை திட்டம், ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையம், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகனம் போன்ற சிறப்பு திட்டங்களை செயல்படுத்தியவர். அந்த வகையில், அவரை கவுரவிக்கும் வகையில் அவரது பிறந்த நாளான பிப்ரவரி 24-ஐ மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கொண்டாட தமிழகஅரசு அறிவித்து உள்ளது.
​அதன்படி, ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழா நடைபெற்றது. விழாவில், கலெக்டர் தலைமையில் அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் குழந்தைகள் பெண்குழந்தை பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 
பரிசு

மேலும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பெண் குழந்தைகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கிபாராட்டினார். இந்த நிகழ்ச்சியில், ராமநாதபுரம் இளைஞர் நீதிக்குழும தலைவர் மற்றும் நீதிபதி ஜெனித்தா, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் வசந்த குமார், மாவட்ட கல்வி அலுவலர் முத்துசாமி உட்பட அரசு அலுவலர்கள் பெண் குழந்தைகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story