தேர்தல் ஆலோசனைக்கூட்டம்
எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் தேர்தல் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
சாயல்குடி,
சாயல்குடியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பில் தேர்தல் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முதுகுளத்தூர் தொகுதி தலைவர் ராஜா முகம்மது தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் முகம்மது ஆரிப் வரவேற்று பேசினார். ராமநாதபுரம் மாவட்ட தலைவர் நூர் ஜியாவுதீன், மாவட்ட பொதுச்செயலாளர் பரக்கத்துல்லா, சாயல்குடி நகர் தலைவர் ஜாபர் அலி, மாவட்ட செயலாளர் நூருல்அமீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் பேசுகையில் 2021 தேர்தலை முன்னிட்டு 234 தொகுதிகளிலும் தேர்தல் பணிக்குழு நியமித்து முகவர்கள் மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமித்து வருகிறோம். தமிழகத்தில் மதச்சார்பற்ற கட்சியுடன் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும். வருகிற சட்டமன்ற தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சட்டமன்றத்திற்குள் அதிக உறுப்பினர்களை கொண்டுசெல்லும் என்றார். கூட்டத்தில் பாப்புலர் பிரண்ட் முதுகுளத்தூர் தொகுதி தலைவர் அண்ணல்முகம்மது, தொகுதி துணைத்தலைவர் சலீம் குதுப், மாவட்ட வர்த்தக அணி முகமது நசீர், இணை செயலாளர்கள் காஜா முகைதீன், மீரான் முகைதீன் மன்பா உள்படி நிர்வாகிகள் பங்கேற்றனர். முதுகுளத்தூர் தொகுதி பொருளாளர் நிஜாம் முகைதீன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story