சுற்றுலா பயணிகளுக்கு ‘கொரோனா இல்லை’ என்ற சான்றிதழ் கட்டாயம்
கேரளாவில் இருந்து நீலகிரி வரும் சுற்றுலா பயணிகளுக்கு ‘கொரோனா இல்லை’ என்ற சான்றிதழ் கட்டாயம் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிவித்து உள்ளார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தினமும் 15-க்கும் கீழ் கொரோனா பாதிப்பு உறுதியாகி வருகிறது. பாதிப்பு குறைந்தாலும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது கேரளாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு உள்ளது.
அந்த மாநில எல்லையை ஒட்டி நீலகிரி மாவட்டம் அமைந்து இருப்பதால், அங்கிருந்து வருகிறவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
மீண்டும் கொரோனா பரிசோதனை
இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறும்போது, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கூடலூர் அருகே உள்ள 5 சோதனை சாவடிகளில் மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.
குறிப்பாக கேரள சுற்றுலா பயணிகள் கொரோனா பரிசோதனை எடுத்து, தொற்று பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை கட்டாயம் நீலகிரிக்குள் கொண்டு வர வேண்டும். இன்று (அதாவது நேற்று) முதல் சோதனைச்சாவடிகளில் கொரோனா பரிசோதனை மீண்டும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
Related Tags :
Next Story