ஜாக்டோ-ஜியோ மாநாட்டிற்கு 3 ஆயிரம் பேர் பயணம்
ஜாக்டோஜியோ மாநாட்டிற்கு ராமநாதபுரத்தில் இருந்து 3 ஆயிரம் பேர் செல்கின்றனர்.
ராமநாதபுரம்,
சென்னையில் ஜாக்டோ ஜியோ சார்பில் நடைபெறும் கோரிக்கை கேட்பு மாநாட்டில் ராமநாதபுரத்தில் இருந்து 3 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொள்கின்றனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை வழங்க வேண்டும், வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய அநீதியை சரிசெய்ய வேண்டும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 28-ந் தேதி சென்னையில் ஜாக்டோ ஜியோ சார்பில் கோரிக்கை கேட்பு மற்றும் உரிமை மீட்பு மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் மாநிலம் முழுவதும் இருந்து 1 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொள்கின்றனர். இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 3ஆயிரம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கலந்துகொள்கின்றனர். இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் முருகேசன், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சண்முகநாததுரை ஆகியோர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story