மூங்கில்துறைப்பட்டில் கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் பூ கடைக்குள் புகுந்தது
மூங்கில்துறைப்பட்டில் கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் பூ கடைக்குள் புகுந்தது
மூங்கில்துறைப்பட்டு
பொரசப்பட்டு பகுதியில் இருந்து கரும்பு ஏற்றிய டிராக்டர் ஒன்று நேற்று மூங்கில்துறைப்பட்டில் உள்ள கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சென்று கொண்டிருந்தது. மூங்கில்துறைப்பட்டு 4 முனை சந்திப்பு அருகே வந்தபோது திடீரென லாரி ஒன்று திருவண்ணாமலை-கள்ளக்குறிச்சி சாலையில் குறுக்கே கடந்து சென்றது. இதனால் அதிர்ச்சி டிராக்டர் டிரைவர் லாரியின் மீது மோதாமல் இருக்க பிரேக் பிடித்தார். இதில் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையோரம் உள்ள பூக்கடைக்குள் புகுந்தது. டிராக்டர் வருதை பார்த்து கடையில் இருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்த விபத்து காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்து வந்த மூங்கில்துறைப்பட்டு போலீசார் விபத்தில் சிக்கிய டிராக்டரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். மூங்கில்துறைப்பட்டில் கரும்பு ஏற்றி வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் சம்பவம் தொடர்கதையாக நிகழ்ந்து வருவது பொதுமக்கள், வியாபாரிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.. எனவே விபத்தை தவிர்க்க அங்கு போலீசார் பணியமர்த்தப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Related Tags :
Next Story