சூதாடிய 6 பேர் கைது
ராமநாதபுரம் அருகே சூதாடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வாணி கிராமம் அருகில் காட்டுகருவேல மரங்களுக்கு இடையில் சிலர் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தது தெரிந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்று பணம் வைத்து சூதாடிய வாணிகிராமத்தை சேர்ந்த முகம்மதுராசிக் (வயது52), கபீர் (35), ராதாகிருஷ்ணன் (35), செய்யது இப்ராகிம் (34), செந்தில்குமார் (38), மேலவாணி ராஜா (30) ஆகிய 6 பேரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரம் மற்றும் சீட்டுகட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story