உளுந்தூர்பேட்டை அருகே மின் கம்பத்தில் கார் மோதி பெண் பலி


உளுந்தூர்பேட்டை அருகே  மின் கம்பத்தில் கார் மோதி பெண் பலி
x
தினத்தந்தி 24 Feb 2021 10:53 PM IST (Updated: 24 Feb 2021 10:53 PM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே மின் கம்பத்தில் கார் மோதி பெண் பலி

உளுந்தூர்பேட்டை

நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியை சேர்ந்தவர் அந்தோணியம்மாள் (வயது 80). உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இவரை சிகிச்சைக்காக அவரது உறவினர்கள் வாடகை காரில் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர். திருச்செந்தூர் தண்ணீர்பந்தலை சேர்ந்த விஜயகுமார் காரை ஓட்டினார். உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எரஞ்சி கிராமத்தில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவில் உள்ள மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. 

இதில் படுகாயமடைந்த அந்தோணியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த அவரது மகன் ரூபன்(48), உறவினர் அந்தோணிகிளாசா, டிரைவர் விஜயகுமார் ஆகியோரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு  ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
விபத்து பற்றிய தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் அந்தோணியம்மாள்  உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story