சூலூர் அருகே திருமண வீட்டில் நகை, பணம் திருட்டு


சூலூர் அருகே திருமண வீட்டில் நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 24 Feb 2021 10:59 PM IST (Updated: 24 Feb 2021 11:03 PM IST)
t-max-icont-min-icon

சூலூர் அருகே திருமண வீட்டில் நகை பணம் திருட்டு போனதால் பரபரப்பு ஏற்பட்டது.

சூலூர்,

சூலூர் அருகே திருமண வீட்டில் நகை, பணம் திருட்டு போனதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

மணமகள் வீடு

கோவை சூலூரை அடுத்த கிழக்கு அரசூரை சேர்ந்தவர் சிவா என்பவரின் மனைவி லட்சுமி (வயது 46). இவர்களுகளுக்கு தினேஷ், தீபக் என்ற மகன்களும், திவ்யா, தீபிகா என்ற மகள்களும் உள்ளனர். சிவா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

இந்த நிலையில் லட்சுமியின் மூத்த மகள் திவ்யாவுக்கும், சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த விஜயராகவன் என்பவருக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இவர்களது திருமணம் நேற்று மேட்டூர் பகுதியில் நடைபெற்றது. பின்னர் திருமணம் முடிந்து மணமக்களை அரசூரில் உள்ள வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

நகை பணம் திருட்டு

அப்போது வீட்டின் கதவு திறக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த திருமண வீட்டார் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர்.அப்போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 4 பவுன் நகை, பணம் திருடப்பட்டிருந்தது.
இதுகுறித்து மணமகள் வீட்டார் சூலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். 

அதன்  பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
 தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். திருமண வீட்டில் நகை, பணம் திருட்டு போன சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story