7 ஆயிரம் வாத்துக்குஞ்சுகள் இறப்பிற்கு ரசாயன கலப்பு காரணமில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்
7 ஆயிரம் வாத்துக்குஞ்சுகள் இறப்பிற்கு ரசாயன கலப்பு காரணமில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்
வேலூர்
ரசாயன கலப்பு காரணமில்லை
காட்பாடி சஞ்சீவிராயபுரத்தைச் சேர்ந்தவர் சுதாகர் (வயது 38). இவர் சத்துவாச்சாரியை அடுத்த பெருமுகை பகுதியில் பாலாற்றங்கரையோரம் கொட்டகை அமைத்து வாத்துக்குஞ்சுகளை வளர்த்து வருகிறார். கடந்த 15-ந் தேதி காலையில் வாத்துக்குஞ்சுகளுக்கு தீவனம் அளித்துவிட்டு குட்டையில் விட்டார். சிறிது நேரம் கழித்து குஞ்சுகள் ஒன்றன்பின் ஒன்றாக மயக்கமடைந்து சுமார் 7 ஆயிரம் வாத்துக் குஞ்சுகள் நீரில் செத்து மிதந்தது.
வாத்துக்குஞ்சுகள் இறப்புக்கு தண்ணீரில் ரசாயனம் கலந்திருக்கலாம் என்று கருதப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கால்நடைத்துறை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று வாத்துக்குஞ்சுகள் குடித்த குட்டை நீர், தீவனம், அவற்றின் உறுப்புகளை எடுத்து ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைத்தனர். அந்த ஆய்வு முடிவில், தீவனம், தண்ணீர், உறுப்புகளில் ரசாயன கலப்பு காரணமில்லை என்று தெரியவந்துள்ளது. இதனால் எவ்வாறு வாத்துக்குஞ்சுகள் இறந்தது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
வைரஸ் தாக்கமா?
இதுகுறித்து கால்நடைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ரசாயன மாற்றம் காரணமாக வாத்துக்குஞ்சுகள் இறக்கவில்லை. ஆனால் பறவைகளை தாக்கும் வைரஸ் தாக்கி இருக்க கூடும். அதற்கான ஆய்வு முடிவு வெளிவரவில்லை. அது வந்த பின்னரே வாத்துக்குஞ்சுகள் இறப்பிற்கான காரணம் தெரியவரும். ஒருவேளை பருவமாற்றத்தினால் கூட இறந்திருக்கலாம் என்றனர்.
Related Tags :
Next Story