பாணாவரத்தில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய வாலிபர் வெடச்டிக்கொலை செய்யப்பட்டார்.


பாணாவரத்தில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய வாலிபர் வெடச்டிக்கொலை செய்யப்பட்டார்.
x
தினத்தந்தி 24 Feb 2021 11:35 PM IST (Updated: 24 Feb 2021 11:35 PM IST)
t-max-icont-min-icon

பாணாவரத்தில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய வாலிபர் வெடச்டிக்கொலை செய்யப்பட்டார்.

காவேரிப்பாக்கம்

குற்ற வழக்குகளில் தொடர்பு

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த ரங்காபுரம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் நித்தியானந்தன் என்ற பிளேடு நித்யா (வயது 33). இவரது மனைவி சோபனா. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். நித்தியானந்தன் மீது அரக்கோணம், பாணாவரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வழிபறி சம்பந்தமான குற்றவழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை சோளிங்கர் -பாணாவரம் சாலையில் உள்ள பாணாவரம் அரசு மேல்நிலைபள்ளி அருகே நித்தியானந்தன் தனது மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். 

வெட்டிக்கொலை

அப்போது மோட்டார் சைக்கிளிலில் வந்த 3 மர்ம நபர்கள்  நித்தியானந்தனை் மடக்கி கழுத்தில் கத்தியால் வெட்டிவிட்டு தப்பி சென்றுவிட்டனர். இதில் நித்தியானந்தன் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இச்சம்பவம் குறித்து அப்பகுதி பொதுமக்கள் பாணாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில்  இன்ஸ்பெக்டர் பாரதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நித்தியானந்தன் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

போலீஸ் விசாரணை

மேலும் பாணாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நித்தியானந்தன் மீது பல்வேறு வழிப்பறி உள்ளிட்ட குற்றவழக்குகள் உள்ள நிலையில் அவர் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து அரக்கோணம் துணைபோலீஸ் சூப்பிரண்டு மனோகரன் விசாரணை நடத்தி வருகிறார்.

பட்டப்பகலில் பொதுமக்கள் அதிக நடமாட்டம் உள்ள இடத்தில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பாணாவரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story