குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?


குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?
x
தினத்தந்தி 24 Feb 2021 11:56 PM IST (Updated: 24 Feb 2021 11:56 PM IST)
t-max-icont-min-icon

குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்

வெள்ளியணை
கடவூர் ஒன்றியம் மஞ்சாநாயக்கன்பட்டி ஊராட்சி மதுக்கரை பேருந்து நிறுத்தத்தில் இருந்து வடக்கே பாலப்பட்டி, தேவச்சிகவுண்டனூர், பொரணி பொம்மணத்துப்பட்டி ஆகியஊர்களுக்கு தார்ச்சாலை செல்கிறது.கடந்த சில ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட இந்த தார்ச்சாலை மதுக்கரை பேருந்து நிறுத்தத்தில் இருந்து பாலப்பட்டி வரை சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறிப்போனது. இதனால் இந்த சாலையில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டு வருகிறது. எனவே உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு இந்த தார் சாலையை சீரமைத்து, தரமான தார் சாலையாக மாற்றி தர வேண்டுமென அப்பகுதி மக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.


Related Tags :
Next Story