கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் நூதன போராட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் நூதன போராட்டம்
x
தினத்தந்தி 24 Feb 2021 11:57 PM IST (Updated: 24 Feb 2021 11:59 PM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை வலியுறுத்தி 3-வது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் நூதன போராட்டம் நடத்தினர்.

கோவை,

தமிழகம் முழுவதும் அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை கலெக்டர் அலுவலகம் முன் அங்கன்வாடி  ஊழியர்கள் நேற்று 3-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது அவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தும் விதமாக தலையில் முக்காடு போட்டுக்கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அங்கன்வாடி ஊழியர்கள் கூறும்போது, அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். இந்த கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளது. 

எனவே எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை இந்த காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம். எங்களது போராட்டம் 3 நாட்களை கடந்த பின்னரும் அரசு எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல் உள்ளது. எனவே தான் எங்களது எதிர்ப்பினை தெரிவிக்கும் வகையில் தலையில் முக்காடு அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story