சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு


சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
x
தினத்தந்தி 25 Feb 2021 12:07 AM IST (Updated: 25 Feb 2021 12:07 AM IST)
t-max-icont-min-icon

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

வேலாயுதம்பாளையம்
வேலாயுதம்பாளையம் அருகே நன்செய்புகளூரில் மேகபாலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பிரதோஷத்தையொட்டி நந்திபகவானுக்கு பால், பன்னீர், இளநீர், தயிர், சந்தனம், விபூதி உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிவபெருமான் பல்லாக்கில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தொடர்ந்து சுவாமி கோவிலை சுற்றி 3 முறை வலம் வந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல், காகிதபுரம் காசிவிஸ்வநாத கோவில், தோட்டக்குறிச்சி சொக்கநாதர் கோவில், நன்னியூர்புதூர் சிந்தாமணி கோவில், மண்ங்கலம் மணிகண்டேஸ்வர் கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவன்கோவில்களிலும் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story