விஷம் குடித்து பெண் தற்கொலை


விஷம் குடித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 25 Feb 2021 12:19 AM IST (Updated: 25 Feb 2021 12:19 AM IST)
t-max-icont-min-icon

விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

கரூர்
கரூர் தாந்தோணிமலை முத்தம்பட்டி பாலமுருகன் நகரைச் சேர்ந்தவர் ரேவதி (வயது 30). இவருக்கும், சங்கர் என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் ரேவதிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ரேவதி நேற்று முன்தினம் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் ரேவதியை மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இந்த தற்கொலை சம்பவம் குறித்து தாந்தோணிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story