விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வெள்ளியணை
உப்பிடமங்கலம் பேரூராட்சிக்குட்பட்ட சின்னாகவுண்டனூர் காலனி பகுதி மக்களுக்கு குடிநீர், தெருவிளக்கு, சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தராத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து கரூர் கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கட்சியின் பேரூர் கழக செயலாளர் பிரேம் குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் தேவேந்திரன் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் கட்சியின் பல்வேறு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story