பொதுமக்களை அச்சுறுத்திய குரங்குகள் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டன


பொதுமக்களை அச்சுறுத்திய குரங்குகள் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டன
x
தினத்தந்தி 25 Feb 2021 12:22 AM IST (Updated: 25 Feb 2021 12:22 AM IST)
t-max-icont-min-icon

பொதுமக்களை அச்சுறுத்திய குரங்குகள் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டன

அன்னவாசல்:
குரங்குகள் அட்டகாசம்
அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டி ஊராட்சியில் கடந்த சில மாதங்களாக குரங்குகளின் அட்டகாசம் அதிகமாக இருந்தது. குரங்குகள் கூட்டம், கூட்டமாக வீடுகளுக்குள் புகுந்து அங்குள்ள பொருட்களை எடுத்து செல்கின்றன. இதுபோல் வரும் குரங்குகள், கூட்டமாக வருவதால், பொதுமக்கள் அச்சமடைந்து ஓடும் நிலை ஏற்படுகிறது. 
இதுபோன்ற சேட்டைகளை செய்யும் குரங்குகளை பிடித்து, காட்டில் விட வேண்டும் எனதொடர்ந்து பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.
கூண்டு வைத்து பிடிப்பு 
 இதனையடுத்து மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் புதுக்கோட்டை வனத்துறை அதிகாரிகள், ஊராட்சி நிர்வாகத்தின் உதவியோடு இணைந்து குரங்குகளை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதற்காக அந்த பகுதியில் கூண்டு அமைத்து அதில் பழங்கள், காய்கள், கடலை வைத்து காத்திருந்தனர். இதைத் தொடர்ந்து கூண்டில் உள்ள பழங்களை சாப்பிடுவதற்காக குரங்குகள் கூட்டமாக அங்கு சென்றன. 
அப்போது திட்டமிட்டபடி குரங்குகள் கூண்டில் ஏறியவுடன் அதனை வனத்துறையினர் மடக்கி பிடித்தனர். அந்த கூண்டில் சுமார் 20 குரங்குகள் சிக்கின.
வனப்பகுதியில் விடப்பட்டது
இதையடுத்து, அந்த குரங்குகளை, பாதுகாப்பாக வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், குரங்குகளை பிடிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து செயல்பட வேண்டும். 
இங்கே 50- க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றித்திரிவதால் நாங்கள் பாதிக்கப்படுகிறோம். எனவே, இவைகளை துன்புறுத்தாமல் கூண்டுகளில் அடைத்து அடர்ந்த வனப்பகுதிகளுக்கு கொண்டு சென்றுவிட வேண்டும் என்றனர்.

Next Story