குளித்தலை கல்வி மாவட்ட செயற்குழு கூட்டம்
குளித்தலை கல்வி மாவட்ட கூட்டம் நடைபெற்றது.
குளித்தலை
குளித்தலை கல்வி மாவட்ட பாரத சாரண, சாரணிய இயக்க செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட முதன்மை ஆணையர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் வளர்மதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மணிகண்டன் வரவேற்று, 2019-20-ம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை மற்றும் வரவு செலவு அறிக்கையை வாசித்தார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்கள் பதவியேற்றுக் கொண்டனர். சாரண உறுதிமொழி எடுக்கப்பட்டது. தொடர்ந்து மாநில ஆளுநர் விருது பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களையும், சாரண, சாரணிய இயக்கத்தில் தொடர்ந்து சேவையாற்றி வரும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் ஆகியோருக்கும், கொேரானா விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்று சேவை புரிந்த சாரண, சாரணிய ஆசிரியர்களுக்கும், மாவட்ட முதன்மை ஆணையர் பாலசுப்பிரமணியன், சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கி பாராட்டினார்.
கூட்டத்திற்கு வந்திருந்த உறுப்பினர்கள் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து குளித்தலை பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியரும் சாரணிய ஆணையருமான மஞ்சுளா, மாவட்ட சாரணஆணையர் மனோகரன், வாழ்நாள் உறுப்பினர் பழனிச்சாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவராலும் ஒருமனதாக ஒப்புதல் வழங்கப்பட்டது. முடிவில் மாவட்ட அமைப்பு ஆணையர் சுந்தர சுப்பிரமணியன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story