திருப்பூர் மாவட்டத்தில் வழக்கம் போல் பஸ்களை இயக்க ஏற்பாடு


திருப்பூர் மாவட்டத்தில் வழக்கம் போல் பஸ்களை இயக்க ஏற்பாடு
x
தினத்தந்தி 25 Feb 2021 12:24 AM IST (Updated: 25 Feb 2021 12:24 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் வழக்கம்போல் பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர்:
அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் இன்று (வியாழக்கிழமை) முதல் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இருப்பினும் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் ஆளும் கட்சிக்கு ஆதரவான அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்க ஊழியர்களை கொண்டு அரசு பஸ்களை இயக்குவதற்கான ஏற்பாடுகளை போக்குவரத்து கழக அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். திருப்பூர் மண்டலத்தில் உள்ள கிளை அலுவலகங்களில் இன்று காலை முதல் பஸ்களை வழக்கம் போல் இயக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.
திருப்பூர் மண்டலத்தில் அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிரைவர், கண்டக்டர்கள் இன்று பணிக்கு வர உள்ளனர். நேற்று இரவு முதல் அதற்கான பணிகளை அதிகாரிகள் தொடங்கினார்கள். திருப்பூர் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் வழக்கம் போல் பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் மக்கள் பாதிக்காத வகையில் பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story