சிவன் கோவில்களில் பிரதோஷம்
சிவன் கோவில்களில் பிரதோஷம்
புதுக்கோட்டை:
பிரதோஷத்தையொட்டி புதுக்கோட்டையில் சிவன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. சாந்தநாத சாமி கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. மேலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதேபோல திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவிலிலும் நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் கீரமங்கலத்தில் மெய்நின்ற நாதசுவாமி ஆலயத்தில் உள்ள நந்தி பகவானுக்கு மஞ்சள், பால், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பிரதோஷ குழுவினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story