மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது


மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது
x
தினத்தந்தி 25 Feb 2021 12:42 AM IST (Updated: 25 Feb 2021 12:42 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது

நொய்யல் 
திண்டுக்கல் மாவட்டம் சடைலம்பட்டி அருகே செங்குறிச்சிஆலம்பட்டியை சேர்ந்தவர் அழகர் மகன் பூமிராஜ் (22). கூலித்தொழிலாளி. இவர் தற்பொழுது நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உழவர் பட்டியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து, கரூர் மாவட்டம் நடையனூரில் உள்ள ஒரு தேங்காய் குடோனில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பரமத்திவேலூர் அருகே உழவர் பட்டியை இருந்து பூமிராஜ் தனது மோட்டார் சைக்கிளில் அவரது உறவினர்களான ராமன் மற்றும் சிவா ஆகியோர்களை அழைத்து கொண்டு கரூருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது மூலிமங்கலம் பிரிவுரோடு அருகே வந்துகொண்டிருந்தபோது, திடீரென பூமிராஜ் தேங்காய் குடோன் உரிமையாளிடம்  பணம் வாங்கிக்கொண்டு செல்லலாம் என்று நடையனூர் செல்வதற்காக மோட்டார் சைக்கிளை வலது பக்கமாக திருப்ப முயன்றார். அப்போது, பின்னால் வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 
இதில் பூமிராஜ், ராமன் மற்றும் சிவா ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர். பூமிராஜ் படுகாயம் அடைந்தார். ராமன், சிவா ஆகியோர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். காரை ஓட்டி வந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த வெங்கடேஷ்குமார் பலத்த காயம் அடைந்தார். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் படுகாயமடைந்த பூமிராஜ், வெங்கேடஷ்குமார் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் கார் டிரைவர் வெங்கடேஷ் குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story