திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பால் பரபரப்பு


திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பால் பரபரப்பு
x
தினத்தந்தி 25 Feb 2021 1:02 AM IST (Updated: 25 Feb 2021 1:10 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி, 

திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகில் கடந்த 3 நாட்களாக அரசு ஊழியர்கள், அரசியல் கட்சியினர் சார்பில் பல்வேறு போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது. அதையொட்டி, கலெக்டர் அலுவலக வளாகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று பாதுகாப்பு பணியில் ஆயுதப்படை போலீஸ்காரர் லாரன்ஸ் ஈடுபட்டிருந்தார். அவரது மோட்டார் சைக்கிளை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிறுத்தி இருந்தார். 

அந்த வேளையில் புதர் பகுதியில் இருந்து வெளியேறிய பாம்பு ஒன்று, போலீஸ்காரர் லாரன்ஸ் மோட்டார் சைக்கிளில் ஏறி உள்ளே பதுங்கி கொண்டது. அதை பார்த்த சிலர், அங்கிருந்த போலீசாரிடம் கூறினர். பின்னர், அந்த பாம்பு குச்சியால் துரத்தப்பட்டதால் மீண்டும் புதர் பகுதிக்குள் சென்று விட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலகம் அருகில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர் நடத்திய காத்திருப்பு போராட்ட களத்திற்குள் கருநாக பாம்பு ஒன்று புகுந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story