கோவில் கும்பாபிஷேகம்


கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 25 Feb 2021 1:03 AM IST (Updated: 25 Feb 2021 1:03 AM IST)
t-max-icont-min-icon

கோவில் கும்பாபிஷேகம்

பெரம்பலூர்
பெரம்பலூரை அடுத்த கோனேரி பாளையத்தில் மலைப்பாதை அருகில் சக்தி வினாயகர், பாலமுருகன், மகாசக்தி மாரியம்மன், மலைக்குன்று பெருமாள் கோவில் புதிதாக கட்டப்பட்டு, அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் கோனேரிஆற்றிலிருந்து புனித நீருடன் குடிஅழைப்பு நிகழ்ச்சி நடந்தது. அதனைத் தொடர்ந்து வாஸ்து சாந்தி மற்றும் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. கும்பாபிஷேக விழாவிற்கு திருப்பணிக்குழு தலைவர் அம்மன் முத்தையா தலைமை வகித்தார். பெரம்பலூர் நாராயணன் மணிகண்டன் தலைமையில் சிவாச்சாரியார்கள் 2 காலயாகசாலை பூஜைகள் மற்றும் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். விழாவில் டாக்டர்கள் திலீபன் முத்தையா, டாக்டர் சில்பிகாதேவி, டாக்டர் அறிவொளி மற்றும் கோனேரிப்பாளையம், பெரம்பலூர், எசனை, கீழக்கரை, ரெட்டைமலை சந்து, நார்க்காரன் கொட்டகை, வடக்கு மாதவி எளம்பலூர் சமத்துவபுரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பெரம்பலூரை அடுத்த சத்திரமனை வேலூர் கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன், வீரன் மற்றும் பரிவார தெய்வங்கள் அடங்கிய கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்தது.

Next Story