ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் உண்டியல் மூலம் ரூ.71½ லட்சம் காணிக்கை வசூல்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் உண்டியல் மூலம் ரூ.71½ லட்சம் காணிக்கை வசூல்
ஸ்ரீரங்கம், பிப்.25-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் உள்ள உண்டியல்கள் மாதம் தோறும் திறக்கப்பட்டு அதில் உள்ள காணிக்கைகள் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டு, கருடமண்டபத்தில் காணிக்கை எண்ணும் பணி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் நடைபெற்றது. இதில் காணிக்கையாக ரூ.71 லட்சத்து 56 ஆயிரத்து 675-ம், 398 கிராம் தங்கம், 1 கிலோ 60 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு பணம் ஆகியவை கிடைத்தது. காணிக்கை எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story