கலெக்டர் அலுவலகம் முன்பு 3-வது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்


கலெக்டர் அலுவலகம் முன்பு 3-வது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 25 Feb 2021 1:41 AM IST (Updated: 25 Feb 2021 1:41 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று 3-வது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று 3-வது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

3-வது நாளாக போராட்டம் 

திருப்பூர் மாவட்ட அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் காத்திருப்பு போராட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு கடந்த 22-ந் தேதி தொடங்கியது. அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் கடந்த 38 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்கள். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அங்கன்வாடி ஊழியர்களை 7-வது ஊதிய குழுவில் அரசு ஊழியராக்குவேன் என உறுதியளித்தார்.
ஆனால் இதுவரை அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றும் வரை தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று 3-வது நாளாக காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

கடும் வெயில் 

இந்த போராட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் பாக்கியம் தலைமை தாங்கி பேசினார். மாவட்ட செயலாளர் எல்லம்மாள், பொருளாளர் பேபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே கடந்த 2 நாட்களாக கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு கடும் வெயிலில் சமையல் செய்து சாப்பிட்டு வருகிறார்கள்.
இதற்கிடையே வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் நேற்று காலை கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு விட்டு, எதிர்புறம் இருக்கிற பஸ் நிலையத்தில் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்கள். போராட்டத்தையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

Next Story