சாலை பாதுகாப்பு வார விழா


சாலை பாதுகாப்பு வார விழா
x
தினத்தந்தி 25 Feb 2021 1:51 AM IST (Updated: 25 Feb 2021 1:51 AM IST)
t-max-icont-min-icon

அருப்புக்கோட்டையில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு வார விழாவில் நீதிபதிகள் கலந்து கொண்டனர்.

அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டையில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு வார விழாவில் நீதிபதிகள் கலந்து கொண்டனர். 
சாலை பாதுகாப்பு வார விழா 
அருப்புக்கோட்டையில் நகர் போக்குவரத்து போலீஸ் நிலையம் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு நடைபெற்றது.   போக்குவரத்து பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்லத்துரை, ஆனந்த் முன்னிலையில் சார்பு நீதிபதியும், தாலுகா இலவச சட்ட உதவி மைய தலைவர் பசும்பொன் சண்முகையா, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி வேங்கடலட்சுமி, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சுபாஷினி, குற்றவியல் நீதிபதி மணிமேகலா ஆகியோர் கலந்து கொண்டு போக்குவரத்து விதிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். 
சங்க நிர்வாகிகள் 
இதில் வக்கீல்கள்   சங்கதலைவர் குருசாமி, செயலாளர் பாலச்சந்திரன், பொருளாளர் சீனிவாசகன் உள்பட வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், போக்குவரத்து காவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story