விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 Feb 2021 1:55 AM IST (Updated: 25 Feb 2021 1:55 AM IST)
t-max-icont-min-icon

பட்டாசு வெடி விபத்துகளை தடுக்க வலியுறுத்தி சாத்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சாத்தூர்,
பட்டாசு வெடி விபத்துகளை தடுக்க வலியுறுத்தி  சாத்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
ஆர்ப்பாட்டம் 
பட்டாசு வெடி விபத்துகளை தடுக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் விருதுநகர் மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சதுரகிரி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ஞானகுரு மணிமாறன், தொகுதி செயலாளர் சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
தொழிலாளர்களுக்கு பயிற்சி 
ஆர்ப்பாட்டத்தின் போது பட்டாசு தொழிலை பாதுகாப்பாக நடத்த தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சமும், காயம் அடைந்தவருக்கு ரூ.5 லட்சமும் நிவாரணம் வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு முறையான பாதுகாப்பு குறித்த பயிற்சி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்ேவறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story