முக்கூடலில் கல்லூரி மாணவ-மாணவிகள் பஸ் மறியல்
முக்கூடலில் கல்லூரி மாணவ-மாணவிகள் பஸ் மறியல் செய்தனர்.
முக்கூடல், பிப்:
முக்கூடல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து நெல்லையில் உள்ள கல்லூரிகளுக்கும், அலுவலகங்களுக்கும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் தினமும் சென்று வருகின்றனர். நேற்று காலையில் முக்கூடல் பஸ் நிலையத்தில் பஸ் ஏறுவதற்காக கல்லூரி மாணவ-மாணவிகள் வந்தனர். வழக்கமாக முக்கூடலில் இருந்து நெல்லைக்கு செல்லும் பஸ் நிறுத்தப்பட்டதை அறிந்து மாணவ- மாணவிகள் பஸ் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் முக்கூடல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காவுராஜன் வந்து கல்லூரி மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனை தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story