சேரன்மாதேவியில் மாற்றுத்திறனாளிகள் 2-வது நாளாக சாலை மறியல்
சேரன்மாதேவியில் மாற்றுத்திறனாளிகள் 2-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சேரன்மாதேவி, பிப்:
மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கம் சார்பில் சேரன்மாதேவி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் நேற்று 2-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் செல்வ சுந்தரி தலைமை தாங்கினார். மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவி தொகையான ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். தனியார் நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் நடந்தது. மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 43 பேரை சேரன்மாதேவி போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
Related Tags :
Next Story