மாவட்ட சிலம்பாட்ட போட்டி சிவகங்கை பள்ளி மாணவர் முதலிடம்


மாவட்ட சிலம்பாட்ட போட்டி சிவகங்கை பள்ளி மாணவர் முதலிடம்
x
தினத்தந்தி 25 Feb 2021 2:54 AM IST (Updated: 25 Feb 2021 2:54 AM IST)
t-max-icont-min-icon

மாவட்ட சிலம்பாட்ட போட்டி சிவகங்கை பள்ளி மாணவர் முதலிடம்

சிவகங்கை
சிவகங்கை மாவட்ட வீர விதை சிலம்பாட்ட கழகம் சார்பில் மாவட்ட அளவிலான சிறந்த சிலம்ப வீரர்களுக்கான தேர்வு போட்டிகள் மானாமதுரையில் நடைபெற்றது. பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டியில் 9 வயதில் இருந்து 10 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான பிரிவில் சிவகங்கை சாம்பவிகா பள்ளி மாணவன் அருண்பிரகாஷ் முதல் இடத்தை பெற்றார். சாதனை படைத்த மாணவனை பள்ளி செயலர் சேகர் பாராட்டி வெற்றி கேடயத்தை பரிசாக வழங்கினார். மேலும் தலைமையாசிரியர் முத்துகுமார், உடற்கல்வி ஆசிரியர் சரவணன் மற்றும் ஆசிரிய, ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story