மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு் ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 Feb 2021 2:56 AM IST (Updated: 25 Feb 2021 2:56 AM IST)
t-max-icont-min-icon

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

திருப்புவனம்
திருப்புவனம் சந்தை திடல் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டரின் கடும் விலை ஏற்றத்தை கண்டித்தும், விலை ஏற்றத்தை ரத்து செய்யக் கோரியும் மத்திய அரசை கண்டித்து கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் அய்யம்பாண்டி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் தண்டியப்பன் விளக்க உரையாற்றினார். இதில் கமிட்டி உறுப்பினர்கள் ஈஸ்வரன், பழனிவேல், ரவி, நீலமேகம், ஆறுமுகம் மற்றும் கிளை செயலாளர்கள், அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story