சுகாதார பணியாளரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு கோரி வழக்கு
சுகாதார பணியாளரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு கோரி வழக்கு
மதுரை, பிப்
மதுரை தனக்கன்குளத்தை சேர்ந்த வளர்மதி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “எனது கணவர் வேல்முருகன் கடந்த 18 ஆண்டுகளாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தற்காலிக சுகாதார பணியாளராக பணிபுரிந்து வந்தார். கொரோனா பாதிப்பின்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 27.7.2020 முதல் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதித்ததில் கொரோனா பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. அதன் பின் கடந்த 30.7.2020 அன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தற்போது நாங்கள் போதிய வருமானமின்றி வறுமைக் கோட்டுக்குக் கீழ் தள்ளப்பட்டுள்ளோம். எனவே எனது கணவரின் இறப்புக்கு உரிய இழப்பீடு வழங்கவும், எங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுகுறித்து சுகாதாரத் துறை செயலாளர், மதுரை மாவட்ட கலெக்டர் ஆகியோர் உரிய பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தார்.
Related Tags :
Next Story