குளத்தில் மூழ்கி வாலிபர் பலி


குளத்தில் மூழ்கி வாலிபர் பலி
x
தினத்தந்தி 25 Feb 2021 2:56 AM IST (Updated: 25 Feb 2021 2:56 AM IST)
t-max-icont-min-icon

குளத்தில் மூழ்கி வாலிபர் பலி

திருப்பரங்குன்றம், பிப்
திருமங்கலம் காட்டுமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லட்சுமணன்(வயது 18). இவரது நண்பர் பழனிவேல்ராஜன்(20). இவர்கள் நேற்று திருப்பரங்குன்றத்தில் சரவண பொய்கை குளத்தில் குளிக்க சென்றனர். நீச்சல் தெரிந்த லட்சுமணன் குளத்தில் இறங்கி குளித்தார். நீச்சல் தெரியாத பழனிவேல்ராஜன் குளத்தின் படிக்கட்டில் அமர்ந்து இருந்துள்ளார். இந்தநிலையில் குளத்தின் ஆழமான பகுதிக்கு லட்சுமணன் சென்று விட்டதாக தெரிகிறது. அதனால் அங்கிருந்து மீண்டு வெளியே வரமுடியாமல் போராடி உள்ளார். அதை கண்ட பழனிவேல்ராஜன் அருகில் இருந்தவர்களிடம் கூறி தனது நண்பனை காப்பாற்றுமாறு கூறியுள்ளார்.. இதனையடுத்து அங்கு இருந்த சிலர் குளத்திற்குள் இறங்கி லட்சுமணனை காப்பாற்ற முயன்றனர். ஆனால் லட்சுமணன் நீரில் மூழ்கியதில் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மதுரை தீயணைப்பு துறையினர் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து தீயணைப்புத்துறை வீரர்கள் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story