சேலத்தில் கத்தியால் குத்தி வாலிபர் தற்கொலை


சேலத்தில்  கத்தியால் குத்தி வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 25 Feb 2021 3:02 AM IST (Updated: 25 Feb 2021 3:02 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் கத்தியால் குத்திக்கொண்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

சேலம்:
சேலத்தில் கத்தியால் குத்திக்கொண்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
தங்கும் விடுதி
திருப்பூர் மாவட்டம் அவினாசி தாலுகா நாதம்பாளையத்தை அடுத்த செம்பியநல்லூர் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகன் சரவணன் (வயது 25). இவர் கடந்த 21-ந் தேதி  சேலம் 5 ரோடு பகுதியில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கினார். நேற்று முன்தினம் காலையில் இருந்து அவரது அறைக்கதவு திறக்கவில்லை.
இதையொட்டி விடுதி ஊழியர்கள், சரவணன் தங்கி இருந்த அறைக்கதவை தட்டினர். வெகுநேரம் ஆகியும் கதவு திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கதவை பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
தற்கொலை
அப்போது சரவணன் நெஞ்சில் கத்தி குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதையொட்டி சரவணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
இது குறித்து போலீசார் கூறும் போது, சரவணன், தன்னை தானே கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம் என்று கூறினர்.
தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story