ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ரெயில்வே பொருட்களை சேதப்படுத்திய வழக்கு:34 பேரை விடுதலை செய்து கோர்ட்டு உத்தரவு
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ரெயில்வே பொருட்களை சேதப்படுத்திய வழக்கு: 34 பேரை விடுதலை செய்து கோர்ட்டு உத்தரவு
சேலம்:
சேலத்தில் கடந்த 2017-ம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து திரளானோர் போராட்டம் நடத்தினர். அப்போது ரெயில் மறியலிலும் ஈடுபட்டனர். இதையடுத்து ரெயில்வே பொருட்களை சேதப்படுத்தியதாக 35 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் ஒருவர் இறந்துவிட்டார்.
இந்தநிலையில் ரெயில்வே பொருட்களை சேதப்படுத்திய வழக்கு விசாரணை சேலம் முதலாவது கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது 34 பேரையும் விடுதலை செய்து நீதிபதி ஆபிரகாம் லிங்கன் தீர்ப்பு அளித்தார்.
Related Tags :
Next Story