நெல்லையில் 3-வது நாளாக அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
நெல்லையில் 3-வது நாளாக அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை, பிப்:
அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்க வேண்டும். அவர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22-ந் தேதி முதல் நெல்லை கலெக்டர் அலுவலகம் அருகில் அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று 3-வது நாளாக தொடர்ந்து அவர்கள் அங்கு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கன்வாடி பணியாளர்களின் காத்திருப்பு போராட்டத்தையொட்டி அங்கு நெல்லை மாநகர உதவி போலீஸ் கமிஷனர் சேகர், பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இரவிலும் போராட்டம் நீடித்தது.
Related Tags :
Next Story