விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 Feb 2021 3:20 AM IST (Updated: 25 Feb 2021 3:20 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டை அருகே விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

செங்கோட்டை, பிப்:

செங்கோட்டை அருகே உள்ள தெற்கு மேடு கிராமத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் தெற்குமேடு கிளை சார்பில் ரேஷன் கடைகளில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்து ரேஷன் கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளை தலைவர் கமரி நிஷா ஆறுமுகம் தலைமை தாங்கினார் நிர்வாகிகள் ஆறுமுகம், மல்லிகா, வள்ளிநாயகம், காளியம்மாள், சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட துணைத்தலைவர் சின்னச்சாமி, தாலுகா செயலாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story