மழையால் சேதம் அடைந்த பயிர்களை வேளாண்மை அதிகாரிகள் ஆய்வு
கடையம் அருகே மழையால் சேதம் அடைந்த பயிர்களை, வேளாண்மை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கடையம், பிப்;
கடையம் வட்டாரம் ஆழ்வார்குறிச்சி மற்றும் பல்வேறு கிராமங்களில் பெய்த கனமழை காரணமாக நெல் பயிர் சாய்ந்து சேதமடைந்தது. நேற்று மாநில வேளாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, மண்டல அலுவலர் சுந்தரம், நெல்லை வேளாண்மை இணை இயக்குனர் கஜேந்திர பாண்டியன், தென்காசி வேளாண்மை இணை இயக்குனர் நல்லமுத்துராஜா, தென்காசி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (துணை வேளாண்மை இயக்குனர்) பாலசுப்பிரமணியன் மற்றும் வேளாண்மை உதவி இயக்குனர் ஏஞ்சலின் பொன்ராணி மற்றும் வேளாண்மை உதவி அலுவலர்கள் பலர் பங்கேற்று பாதிக்கப்பட்ட நெல் பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பாதிக்கப்பட்ட விவசாயிகள் பட்டியல் உடனடியாக தயார் செய்து கொடுத்தால் அதை அரசுக்கு பரிந்துரை செய்து இழப்பீடு பெற்று தருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story