தென்காசியில் நாளை மாசித்திருவிழா தேரோட்டம்
தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் மாசித்திருவிழா தேரோட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
தென்காசி, பிப்:
தென்காசி காசிவிஸ்வநாத சுவாமி கோவிலில் மாசித்திருவிழா தேரோட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
மாசித்திருவிழா
தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் மாசித்திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை 10 மணிக்கு அபிஷேக தீபாராதனை, இரவு 8 மணிக்கு மண்டகப்படி தீபாராதனை, சுவாமி -அம்பாள் வீதி உலா வருதல் நடைபெற்று வருகின்றன.
தேரோட்டம்
திருவிழாவின் 9-ம் நாளான நாளை (வெள்ளிக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு அதிகாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் சுவாமி, அம்பாள் தேருக்கு எழுந்தருள்கிறார்கள். காலை 9 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. முதலில் சுவாமி தேரும், பின்னர் உலகம்மன் தேரும் வடம்பிடித்து இழுக்கப்படுகின்றது.
தேரோட்டத்திற்காக தேர்கள் அலங்கரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. திருவிழா வருகிற 27-ந் தேதி (சனிக்கிழமை) முடிவடைகிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் பரஞ்ஜோதி, தக்கார் சங்கர், கோவில் நிர்வாக அதிகாரி யக்ஞ நாராயணன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story