அம்மாபேட்டையில் திருமண வீட்டில் பந்தல் தீப்பிடித்தது மோட்டார்சைக்கிள்கள் எரிந்து நாசம்


அம்மாபேட்டையில் திருமண வீட்டில் பந்தல் தீப்பிடித்தது மோட்டார்சைக்கிள்கள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 25 Feb 2021 3:36 AM IST (Updated: 25 Feb 2021 3:36 AM IST)
t-max-icont-min-icon

திருமண வீட்டில் பந்தல் தீப்பிடித்தது. இதில் மோட்டார்சைக்கிள்கள் எரிந்து நாசமாகின.

திருமண வீட்டில் பந்தல் தீப்பிடித்தது. இதில் மோட்டார்சைக்கிள்கள் எரிந்து நாசமாகின. 
திருமண வீடு
அம்மாபேட்டை பாரதியார் வீதியை சேர்ந்தவர் ரவி (வயது40). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மகள் திருமணம் நேற்று ஈரோட்டில் நடந்தது. இதற்காக அவரது வீட்டின் முன்பு பந்தல் அமைக்கப்பட்டு, சீரியல் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குடும்பத்துடன் அனைவரும் திருமணத்துக்காக ஈரோடு சென்று விட்டனர். நள்ளிரவு 1.30 மணி அளவில் வீட்டின் முன்பு அமைக்கப்பட்ட பந்தல் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. 
விசாரணை
இதை பார்த்த இயற்கை உபாதையை கழிக்க வெளியே வந்த நபர் ஒருவர், அக்கம்பக்கத்தினரிடம் கூறினார்.
அதைத்தொடர்ந்து அனைவரும் அங்கு சென்று தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். எனினும் வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த 2 மோட்டார்சைக்கிள்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின. மின்கசிவே தீ விபத்துக்கான காரணம் என்று கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்ததும் அம்மாபேட்டை போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

Next Story