முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா


முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
x
தினத்தந்தி 24 Feb 2021 10:09 PM GMT (Updated: 24 Feb 2021 10:09 PM GMT)

முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

திருப்பத்தூர்
திருப்பத்தூர் அருகே கீரணிப்பட்டி முத்துமாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமையான கோவிலாகும். இக்கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. பின்னர் முதற்கால யாகசாலை பூஜை, இரண்டாம் கால பூஜை, மூன்றாம் கால பூஜை,  சாமிக்கு மருந்து சாத்துதல் வைபவம், நான்காம் கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி உள்ளிட்டவை நடைபெற்றது. இதையடுத்து கடம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து தீபாராதனை காட்டினர். பின்னர் பெரிய கருப்பர், முத்துக் கருப்பர், சின்ன கருப்பர் சாமிகளின் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது. மூலஸ்தான அம்பாளுக்கு புனிதநீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 
இந்த நிகழ்ச்சியில் இளையாத்தங்குடி, கல் வாசல், குருவிக்கொண்டான்பட்டி, சேவினிப்பட்டி, கீழச்சிவல்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி அம்பாளுக்கு பட்டு சாற்றும் வைபவம் நடைபெற்றது.

Next Story