கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் நாளை மின்தடை
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் நாளை மின்வினியோகம் இருக்காது என மின்துறை உதவி செயற்பொறியாளர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டி சிப்காட் துணை மின் நிலையத்தில் அலகு ஒன்றுக்கு உட்பட்ட பகுதிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதன் காரணமாக கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் நாளை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் ஒரு பகுதி, கும்மிடிப்பூண்டி பைபாஸ் பகுதி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, புதுகும்மிடிப்பூண்டி, கரும்புகுப்பம், கங்கன் தொட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்துறை உதவி செயற்பொறியாளர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story