கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை பணியாளர் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னை,
சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். தர ஊதியத்தை ரூ.1,900 ஆக வழங்க வேண்டும். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க மாநிலத் தலைவர் மா.சண்முகராஜா தலைமை தாங்கினார். கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுச்செயலாளர் ஜெ.ரவிச்சந்திரன், துணைப் பொதுச்செயலாளர்கள் கா.பெருமாள், ஜெ.ராஜா சிதம்பரம் உள்ளிட்டோர் பேசினர்.
போராட்ட முடிவில் சண்முகராஜா கூறும்போது, ‘கோரிக்கைகளை வலியுறுத்தி 73 மணி நேர தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் போலீஸ் அனுமதி மறுத்ததால், ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து மார்ச் 1-ந் தேதி காஞ்சீபுரத்திலும், 4-ந் தேதி விழுப்புரத்திலும், 8-ந் தேதி ஆண்டிப்பட்டியிலும், 15-ந் தேதி ஸ்ரீரங்கத்திலும் அண்ணா, எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா சிலைகள் முன்பு தரையில் உருளும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது’ என்றார்.
Related Tags :
Next Story