பஸ் ஊழியர்கள் இன்று போராட்டம்: கூட்ட நெரிசல் மிகுந்த நேரங்களில் மெட்ரோ ரெயில் சேவை அதிகரிப்பு


பஸ் ஊழியர்கள் இன்று போராட்டம்: கூட்ட நெரிசல் மிகுந்த நேரங்களில் மெட்ரோ ரெயில் சேவை அதிகரிப்பு
x
தினத்தந்தி 25 Feb 2021 11:06 AM IST (Updated: 25 Feb 2021 11:06 AM IST)
t-max-icont-min-icon

பஸ் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். இதையடுத்து கூட்டநெரிசல் மிகுந்த நேரங்களில் மெட்ரோ ரெயில் சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னை, 

பஸ் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (வியாழக்கிழமை) முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். இதையடுத்து கூட்டநெரிசல் மிகுந்த நேரங்களில் மெட்ரோ ரெயில் சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும் (வழக்கமான நேரம் காலை 8 மணி முதல் 10 மணி வரை), மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் (வழக்கமான நேரம் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை) கூட்ட நெரிசல் மிகுந்த நேரங்களில் 5 நிமிட இடைவெளியில் 25-ந் தேதி (இன்று) மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும். கூட்ட நெரிசல் அல்லாத நேரங்களில் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில்கொண்டு, கூடுதல் சேவைகள் இயக்கப்படும். கூட்ட நெரிசல் நேரங்களில் அதிகரிக்கப்பட்ட மெட்ரோ ரெயில் சேவை 25-ந் தேதி மட்டுமே இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story